Monday 31 December 2018

அறைகுறையான வேண்டுதல் ஓர் வீண்செயல் - மேல்முறையீட்டு நீதிமன்றம்

  • மனுதாரர்  தனது வேண்டுதலில் செயலுறுத்தும் பேராணையை (Writ of mandamus) உள்ளடக்கவில்லை, கேள்விப் பத்திர விளம்பரத்தை (Tender Advertisement) செயலற்றதாக்கும் பேராணையை (Writ of Certiorari) மட்டுமே கோரியுள்ளார்.  

  • பாதை அனுமதிப்பத்திரத்தை (Route Permits) வழங்குவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு 1ஆவது பிரதிவாதிக்குத் தடையாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என மனுதாரர் தனது வேண்டுதலில் குறிப்பிடவில்லை.  

  • கேள்விப்பத்திர விளம்பரத்தை மாத்திரம் செயலிழக்கச் செய்வதற்கான பேராணையைக் கோரல் ஒரு கற்றல் செயன்முறை அல்லது ஒரு வீண்செயல் என்பதுவே இந்த நீதிமன்றத்தின் பார்வையாகும்.  

  • மனுதாரரால் புகார் செய்யப்பட்ட இந்த விவகாரம் 10ஆவது பிரதிவாதியால் கருத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இது தொடர்பில்  நீதிமன்றமொன்றில் சட்ட நடவடிக்கை எடுக்க மனுதாரருக்கு இருக்கும் உரிமை அல்லது தகைமை குறித்து இந்த நீதிமன்றம் திருப்திப்படவில்லை

நீதிபதி: P. Padman Surasena 


வழக்குத் தீர்ப்பை முழுமையாக வாசிக்க...


IN THE COURT OF APPEAL OF THE DEMOCRATIC 
SOCIALIST REPUBLIC OF SRI LANKA

In the matter of an application for mandates  in the 
nature of Writs of Certiorari and Mandamus  in terms 
of Article 140 of the Constitution of Sri Lanka.

1. Inter Provincial Private Elus Association,
62/2, Kandy Road, Ihala Imbuleoda, 
Imbulgoda.

2. All Sri Lanka Private Elus Owners' Federation,
No.1S8/1, Bodhiraja Mawatha,
Colombo 11.

மனுதாரர்கள் (Petitioners) 

CA (Writ) Application No.18/2018

1. Western Province Provincial Road Passenger,
Transport Authority,
No.89, 'Ranmagapaya',
Kaduwela Road, Battaramulla.

2. Thusitha Kularathna,
Chairman,
Western Province Provincial Road Passenger
Transport Authority,
No.89, 'Ranmagapaya',
Kaduwela Road, Elattaramulia.

3. Jagath Perera,
General Manager,
Western Province Provincial ROild Passenger
Transport Authority,
No.89, 'Ranmagapaya',
Kaduwela Road, Battaramulia.

4. Western Provincial Council,
NO.204, Denzil Kobbekaduwa,
Elattaramulla.

5. Pradeep Yasarathne,
Chief Secretary,
Western Provincial Council,
No.32, Sir Marcus Fernando Mawatha, 
Colombo 07.

6. Hon.lsura Dewapriya,
Chief Minister,
Western Provincial Council,
Srawasthi Mandirya,
No.32, Sir Marcus Fernando Mawatha, 
Colombo 07.

7. Hon.K.C.Logeswaran
Governor, Western Province,
NO.109, Sth Floor,
Rotunda Tower, Galle Road,
Colombo 3.

8. Rasika Abeydeera,
Secretary, Provincial Roads, Transport, Co-operative
and Trade, Housing and Construction, Estate
Infrastructure Facilities, Industry and Rural
Development - Western Province,
No.89, 'Ranmagapaya',
Kaduwela Road, Elatlaramuiia.

9. Hon.Lalith Wanigaratne,
Minister of Provincial Roads, Transport, Co-operative,
and Trade, Housing and Construction, Estate
Infrastructure Facilities, Industry and Rural
Development - Western Province,
No.89, 'Ranmagapaya',
Kaduwela Road, Battaramulla.

10. National Transport Commission,
No.241, Park Road,
Colombo 05.

11. Eng.M.A.P. Hemachandra,
Chairman,
National Transport Commission,
No.241, Park Road,
Colombo 05.

12. Dr.D.M.S.Dassanayake,
Director-General,
National Transport Commission,
No.241, Park Road,
Colombo 05.

13. Hon.Nimal Siripala de Silva,
Minister of Transport and Civil Aviation,
7th Floor, Sethsiripaya Stage II,
Battaramulla, Sri Lanka.

14. G.S.withanage,
Secretary,
Ministry of Transport and Civil Aviation,
7th Floor, Sethsiripaya Stage II,
Battaramulla, Sri Lanka.

15. Hon.Attorney-General,
Department of the AttorneY-General,
Colombo 12.

பிரதிவாதிகள் (Respondents)

CA 18/2018                                     
Writ Application

நீதிபதிகள் முன்:
P. Padman Surasena,J. (PiCA) &
A.L. Shiran Gooneratne, J.

வழக்கறிஞர்கள்:
N.M. Reyaz -for the Petitioner
Dr. Wijedasa Rajapakshe,PC for the 1st, 2nd, 3rd, 5th& 9th Respondents
Nayomi Kahawita, SSC for loth and 15th Respondents

Decided on  28.03.2018

P. Padrnan Surasena, J. (PiCA)

இந்த நீதிமன்றம் மனுதாரர் மற்றும் பிரதிவாதிகள் சார்பில் வழக்கறிஞர்கள் முன்வைத்த சமர்ப்பிப்புகளை செவிமடுத்தது. வாதியால் முன்வைக்கப்பட்ட பிரதான முறைப்பாடு என்னவெனில், 1ஆவது  பிரதிவாதி குறித்த மாகாணத்தில் எக்ஸ்பிரஸ்வேயில் இயங்கும் பேருந்து வண்டிகளுக்கான பாதை அனுமதிப்பத்திரங்களை (Route Permits) வழங்குகின்றது என்பதாகும். இந்த பாதை அனுமதிப்பத்திரங்கள் (Route Permits) 10ஆவது பிரதிவாதியால் விநியோகிக்ப்பட்டடிருக்க வேண்டும் என்பதுவே அவரது சமர்ப்பிப்பாகும்.

1ஆவது பிரதிவாதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அறிவார்ந்த சனாதிபதி சட்டத்தரணி தனது விவாதத்தில், மனுதாரர்  பீ6 குறியிட்டு முன்வைத்துள்ள விரிவான வேண்டுதலில் கேள்விப்பத்திர விளம்பரத்தை (Tender Advertisement) "செல்லுபடியற்றதாக்குவதற்கான நீதிப்பேராணை"யை (Writ of Certiorari) மட்டும் வேண்டி விண்ணப்பித்துள்ளமையை குறிப்பிட்டார். 

மனுதாரரின் விண்ணம் அரசியல்யாப்பின் 140ஆவது பிரிவின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது. விண்ணப்பத்தின் தலைப்பில் குறிப்பிடப்பட்டது போன்று இயல்பில் இந்த விண்ணப்பம் வேண்டி நிற்கின்ற நீதிமன்ற ஆணைகள், செயலற்றதாக்கும் பேராணை (Writ of Certiorari) மற்றும் செயலுறுத்தும் பேராணை (Writ of mandamus) என்பனவாகும். எனினும் மனுதாரர் 15.11.2107 திகதியிட்ட பீ6 குறியீடிட்ட தனது வேண்டுதலில் செயலுறுத்தும் பேராணையை (Writ of mandamus) உள்ளடக்கவில்லை என்பதனையும் கேள்விப்பத்திர விளம்பரத்தை (Tender Advertisement) செயலற்றதாக்கும் பேராணையை (Writ of Certiorari) மட்டுமே கோரியுள்ளதையும் இந்த நீதிமன்றம் கவனத்திற்கொள்கின்றது. 

இந்த சூழ்நிலையில், விண்ணப்பத்தில் கோரியுள்ள வேண்டுதலில் பிரதான வேண்டுதலாக  'டி'(D) அடையாளமிட்ட, 15.11.2107 திகதியிட்ட கேள்விப்பத்திர விளம்பரத்தை செயலிழக்கச் செய்யும் பேராணை (Writ of Certiorari) இருப்பதனை இந்த நீதிமன்றம் அடையாளம் காண்கிறது. 1ஆவது பிரதிவாதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டது போன்று பாதை அனுமதிப் பத்திரங்களை (route permists)  வழங்க அதிகாரம் பெற்ற எந்தவொரு பொருத்தமான அதிகாரியினதும் தீர்மாணத்தை செயலிழக்கச் செய்யும் பேராணையை (Writ of Certiorari) மனுதாரர் தனது வேண்டுதலில் குறிப்பிடவில்லை. 

பாதை அனுமதிப்பத்திரத்தை (Route Permits) வழங்குவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு 1ஆவது பிரதிவாதிக்குத் தடையாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என மனுதாரர் தனது வேண்டுதலில் குறிப்பிடவில்லை. 

இந்த சூழ்நிலையில், பீ6 குறியீடிட்டு சமர்ப்பித்த கேள்விப்பத்திர விளம்பரத்தை மாத்திரம் செயலிழக்கச் செய்வதற்கான பேராணையைக் கோரல் ஒரு கற்றல் செயன்முறை அல்லது ஒரு வீண்செயல் என்பதுவே இந்த நீதிமன்றத்தின் பார்வையாகும்.

1ஆவது பிரதிவாதி ஏற்கெனவே கேள்விப்பத்திர விளம்பரம் (Tender Advertisement) செய்து வந்துள்ளமை மட்டுமன்றி, இது போன்ற பாதை அனுமதிப்பத்திரங்கள் (Route Permits) விநியோகித்து வந்துள்ளமையும் இந்த நீதிமன்றம் கண்டுகொண்ட உண்மையாகும். 

மேலும், மனுதாரரால் புகார் செய்யப்பட்ட விவகாரங்கள் 10ஆவது பிரதிவாதியால் கருத்திற்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். அவசியேமற்பட்டால் 10ஆவது பிரதிவாதி நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்குத் தொடர முடியும். 

10ஆவது பிரதிவாதியான தேசிய போக்குவரத்து ஆணையம் இதுவரையில் இவ்விடயம் தொடர்பில் பொருத்தமான தரப்பினரிடம் முறையிடுவதில் கரிசனை காட்டவும் இல்லை. 

எனவே, இந்த நீதிமன்றம் குறித்த விவகாரத்தில் நீதிமன்றமொன்றில் சட்டநடவடிக்கை எடுக்க மனுதாரருக்கு இருக்கும் உரிமை அல்லது தகைமை குறித்துத் திருப்திப்படவில்லை. 

இந்தச் சூழ்நிலையில், இந்த நீதிமன்றம் பிரதிவாதி மீது அறிவிப்புகளை வழங்க மறுக்கிறது. இந்த விண்ணப்பம் செலவுக்(கொடுப்பணவு)கள் இல்லாமல் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். 

PRESIDENT OF THE COURT OF APPEAL

A.L. Shiran Gooneratne, J.
                                       
                                          I agree.
JUDGE OF THE COURT OF APPEAL 




ஏனைய பதிவுகள்......



2. சுப்ரீம் கோட்ர் எச்சரிக்கை - நீதிமன்றங்கள் சட்டங்களைக் கற்கும் கல்விக்கூடமல்ல

3. "Courts of law are Courts of justice and not academies of law" - Supreme Court of Sri Lanka


No comments:

Post a Comment