Saturday, 15 December 2018

சட்டத்தரணிகளும் பொது மக்களும் - ஒரு கருத்து

Posted By: Admin
Date: 15th December 2018

இலங்கையில் சட்த்திரணிகளிடம் இருந்து நாம் பெற்றுக்கொள்ளும் சட்டஆலோசனைகளின் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் தம்மிடம் வரும் சேவைபெறுஞர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதனைக் கருத்திற்கொள்ளாது தனது சம்பாத்தியத்திற்கான ஒரு வழியாக மாத்திரம் சேவைபெறுஞர்களைப் பார்க்கும் சட்டத்தினிகளும் எமது சமூகத்தில் காணப் படுகின்றனர்.



இவர்களில் சிலர் தன்னிடம் வரும் சேவைப் பெறுஞர்களுக்கு சார்பாக எப்படியாவது நீதிமன்றத் தீர்மானத்தைப் பெற்றுக் கொடுத்தலைத் தமது பொறுப்பாகக் கருதுகின்றனர்.

இன்னும் சிலர் இன்னொரு படி மேலே சென்று நீதிமன்ற செற்பாட்டு ஒழுங்கைப் பயன்படுத்தி அடுத்த தரப்பை இயன்றவரை அலைக்கழித்தல் மூலம் தனது தரப்பினர்க்கு எதிர்த்தரப்பை நோவினை செய்த சிற்றின்பச் சுகத்தைப் பெற்றுக் கொடுத்தலைத் தனது புனிதமான சட்டச்சேவையாகக் கருதிச் செயற்படுத்தி தனது நாளாந்த வருமானத்தைப் பெற்றுக் கொள்வதனை அவதானிக்கலாம்.

இதுவே தனது வயிற்றுப் பிழைப்புக்கான ஒரு முறையாக அவர்களது உள்ளங்களில் இயைபாக்கமடைந்ததும் அதுகுறித்த எந்தவிதமான குற்ற உணர்வுமின்றி  மேற்குறிப்பிட்ட விதத்தில் சட்ட ஆலோசனை வழங்குவோராக மாறுவது தவிர்க்க முடியாத ஒரு கசப்பான உண்மையாகும்.

இவ்வாறு உளவியல் ரீதியாக நீதி நெரிகளை முதன்மைப் படுத்தாமல் அநியாயத்திற்குத் துணைபோவதனைத் தனது சேவையாக ஏற்று செயற்படுத்தி வரும் சட்டத்தரணிகளிடம் நீங்கள் மாட்டிக்கொண்டால் அது உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்கொள்கின்ற மிகப்பெரிய துர்அதிருஷ்டமே.

இத்தகையவர்கள் உங்கள் நண்பர்களாக அல்லது உறவினர்களாக ஏற்கெனவே உங்களுக்கு அறிமுகமாகி இருக்கலாம். ஆனால் சட்டச் சேவை என்று நீதிமன்ற உதவியை அவர்களிடம் நாடினால் அவர்களது இன்னொரு முகத்தையும் நீங்கள் அநேகமாகக் கண்டகொள்ள நேரிடலாம்..

நீதிமன்றம் வரை சென்று இவ்வாறான சட்டத்தரணிகளை சந்திக்க வேண்டிய தேவை உங்களில் ஒருவருக்கேனும் ஏற்படாதிருக்கட்டும்.

எனது வாழ்நாளில் நான் சந்தித்த சட்டத்தரணிகளில் ஒருவரேனும் சாதாரணமாக மனிதர்களால் விரும்பப்படும் நீதி நெரிகளை ஏற்றவர்களாக  இல்லை. இதன்மூலம் முழுமொத்த சடடத்தரணிகளதும் நிலையும் இப்படித்தான் இருக்கும் என்று நான் குறிப்பிடவில்லை. அப்படி இருக்கவும் கூடாது எனக் கடவுளைப் பிரார்த்திக்கின்றேன்.

No comments:

Post a Comment