Tuesday 27 November 2018

சமநிலைச் சமுதாயமும் சட்டத்துறை நிறுவனங்களும் நிபுணர்களும்

#சமநிலை  #shamanilai

பொது மக்கள்  சட்டத்தரணிகளிடம் தாம் பெற்றுக் கொள்ளும் சட்ட ஆலோசனைகளின் பொறுத்தப்பாடு குறித்து அறிந்துகொள்வது அத்திய அவசியமாகும்.



பொது மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைக்குத் தீர்வு தேடி நீதிமன்றத்தை நாடுவதில்  பலதரப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இவற்றுள் சட்டத்தரணிகளின் முறைகேடான சட்ட ஆலோசனைகள், சட்டத்தரணிகள் தமது வருமானத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு வழக்கை இழுத்துச்செல்வதற்கு ஏற்றதாக தகவமைத்தல், சட்டத்தரணிகள் வழக்கை இயன்றவரை இழுத்துச் செல்வது, மேலும் சட்டத்தரணிகளிடம் என்ன எதிர்பார்க்கின்றோம் என்ற தெளிவு பொதுமக்களிடம் இல்லாமை என்பன  குறிப்பிடத்தக்க சில அவதானங்களாகும். 



அதே வேளை, சட்டத்தரணிகள் தம்மிடம் சேவையை நாடி வருவோரிடமிருந்து கிடைக்கும் கட்டணத்தில் தனது வயிற்றுப்பிழைப்பைக் கொண்டு செல்ல நேரிடுவதால் 'வாடிக்கையாளர்களுக்கு உச்சமட்டசேவை செய்வதா?' அல்லது 'தனது வருமானத்தைக் தக்கவைத்துக் கொள்ளும் விதத்தில் வழக்கை நகர்த்துவதா?' என்ற ஒழுக்காற்றுச் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் நிலையும் இல்லாமல் இல்லை. 



நீதிமன்றத்தை நாடும் மக்கள் தமக்கான நியாயமான சட்டச் சேவையை பெற்றுக் கொள்வதனை உறுதி செய்வதற்கான குறைந்தமட்டப் புரிதலையாவது பெற்றுக் கொள்ளாதவர்களாகப் இருக்கும்வரையில் அவர்கள் பல கசப்பான அனுவபங்களை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாகும். 



நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது சட்டத்தரணிகளால் ஏமாற்றப்பட்டவர்களாக இருப்பின் அல்லது அநியாயத்திற்கு உட்பட்டவர்களாக இருப்பின்  அது குறித்து எம்முடன் இணையத்தில் பகிர்ந்துகொள்வதன் மூலம் ஏனையவர்களுக்கு அதுதொடர்பில் அறிவூட்டலாம். 




No comments:

Post a Comment