Monday 31 December 2018

அறைகுறையான வேண்டுதல் ஓர் வீண்செயல் - மேல்முறையீட்டு நீதிமன்றம்

  • மனுதாரர்  தனது வேண்டுதலில் செயலுறுத்தும் பேராணையை (Writ of mandamus) உள்ளடக்கவில்லை, கேள்விப் பத்திர விளம்பரத்தை (Tender Advertisement) செயலற்றதாக்கும் பேராணையை (Writ of Certiorari) மட்டுமே கோரியுள்ளார்.  

  • பாதை அனுமதிப்பத்திரத்தை (Route Permits) வழங்குவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு 1ஆவது பிரதிவாதிக்குத் தடையாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என மனுதாரர் தனது வேண்டுதலில் குறிப்பிடவில்லை.  

  • கேள்விப்பத்திர விளம்பரத்தை மாத்திரம் செயலிழக்கச் செய்வதற்கான பேராணையைக் கோரல் ஒரு கற்றல் செயன்முறை அல்லது ஒரு வீண்செயல் என்பதுவே இந்த நீதிமன்றத்தின் பார்வையாகும்.  

  • மனுதாரரால் புகார் செய்யப்பட்ட இந்த விவகாரம் 10ஆவது பிரதிவாதியால் கருத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இது தொடர்பில்  நீதிமன்றமொன்றில் சட்ட நடவடிக்கை எடுக்க மனுதாரருக்கு இருக்கும் உரிமை அல்லது தகைமை குறித்து இந்த நீதிமன்றம் திருப்திப்படவில்லை

நீதிபதி: P. Padman Surasena 


வழக்குத் தீர்ப்பை முழுமையாக வாசிக்க...

Saturday 29 December 2018

Incomplete "Writ Application" is either academic or futile exercise - The Court of Appeal

  • "As pointed out by the learned President's Counsel for the 1st Respondent, the petitioner has not prayed for any writ to quash any decision made by any relevant authority with regard to the issuance of route permits."
  • "It is the view of this Court that it would be either an academic or a futile exercise to grant only a writ of certiorari merely to quash the particular tender advertisement." 
  • "The matters complained by the petitioner are really matters for the 10th Respondent to address and complain to Court if necessary. The 10th Respondent being the National Transport Commission has not so far agitated these matters in any appropriate forum."
P. Padman Surasena, J. (PiCA)

To Read the full Judgment 

Thursday 27 December 2018

எந்த நீதிமன்றத்தில் எதைக் கோருவது? வழக்காளிகளும் வழக்கறிஞர்களும்!

"மனுதாரர் அந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் (Suprem Court) மேல்முறையீடு செய்யாமல் அதற்குப் பதிலாக இங்கு (Court of Appeal) இந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளார்."
 "ஒருவிடயத்தை நான் இங்கு நேரடியாகவே குறிப்பிட வேண்டும். 
சிவில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒதுக்கி வைக்க இந்த நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை, அதற்கான அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது."
 நீதிபதி: Samayawardhena

 முழுத்தீர்ப்பையும் வாசிக்க ...

Monday 24 December 2018

"Technical submissions at the wrong place" - The Court of Appeal

"The petitioner did not appeal to the Supreme Court against that Judgment."
 "I must straightaway state that this Court has no jurisdiction to set aside the Judgment of the Civil Appeal High Court and only the Supreme Court has jurisdiction to do so.."
"it is abundantly clear that the respondent has pointed out the correct defendant to the fiscal irrespective of the fact that there is a slight difference regarding initials and assessment number of the house."
"This slight difference regarding name and address is completely beside the point and can be corrected as long as the correct person to whom summons shall be served has been correctly identified and summons served."

Read the full Judgement below...

சுப்ரீம் கோட்ர் எச்சரிக்கை - நீதிமன்றங்கள் சட்டங்களைக் கற்கும் கல்விக்கூடமல்ல

"மிகவும் தொழில்நுட்பம் சார்ந்த இவ்விடயம், உடணடியாக நிவாரணம் பெற்றுக்கொடுக்க  வேண்டிய ஒரு விடயத்தைக் கொண்டுள்ள இந்த வழக்கில், நீதி வழங்குவதைத் தாமதப்படுத்தியுள்ளது. முறையான நீதி வழங்குவதில் தொழில்நுட்ப விடயங்களை ஆட்சேபனையாகக் கொண்டுவருவது தவிர்க்கப்படல் வேண்டும். மேலும் வழக்குகளில் எதிர்பார்க்கப்படும் நலன்களை உறுதிப்படுத்தி, நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு தரப்பினர் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
இத்தகைய தொழில்நுட்ப ரீதியான ஆட்சேபனைகளைக் கொண்டுவருவதால், அவற்றைக் கையாளும் உயர் நீதிமன்றங்கள் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடுகின்ற, உயர் நீதிமன்றங்களின் அதிகமான நேரத்தை இவை எடுப்பதுடன் ஏற்கெனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை இன்னும் தாமதப்படத்துகின்றது.
பெரும்பாலும் இத்தகைய தொழில்நுட்ப விடயங்களைக் கையாள்வது ஒரு கல்வி பயிற்சியாக மட்டுமே காணப்படுகின்றது. இவ்வாறான விடயங்களில் வழக்குகளைத் தாக்கல்செய்வோர் (Litigants) ஆர்வம் காட்டுவதுமில்லை. நீதிமன்றத்தின் பெறுமதியான நேரத்தை எடுத்துக் கொள்ளும் இவ்வாறான தொழில்நுட்ப ரீதியான ஆட்சேபனைகளைத் தவிர்ப்பதன் மூலம் நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்க முடியும்.
இங்கு வழக்காளிகள் முக்கியத்துவம் கொடுப்பது நீதிமன்றங்களில் இருந்து குறித்த பிரச்சினைக்கு நீதியைப் பெறுவதற்கே. அதுவே அவர்களின் எதிர்பார்க்கை ஆகும். மாறாக வழக்கில் கையாளப்படவேண்டிய தொழில்நுட்பங்கள் அவர்களது எதிர்பார்க்கையல்ல. அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டுள்ளபடி, நினைவில் வைக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் சட்டங்களைக் கையாளும் நீதிமன்றங்கள் நீதியை உறுதிப்படுத்தும் மன்றங்களேயன்றி சட்டங்களைக் கற்கைக்கு எடுத்துக்கொள்ளும் கல்விக்கூடமல்ல."
 நீதிபதி. சுரேஷ் சந்த்ரா
வழக்குத் தீர்ப்பை முழுமயாக வாசிக்க...

Saturday 22 December 2018

"Courts of law are Courts of justice and not academies of law" - Supreme Court of Sri Lanka


"What is important for litigants would be their aspiration to get justice from courts on merits rather than on technicalities.
Very often the dealing of such technicalities become only an academic exercise with which the litigants would not be interested."
Suresh Chandra J,
To Read the full Judgement ...

Saturday 15 December 2018

சட்டத்தரணிகளும் பொது மக்களும் - ஒரு கருத்து

Posted By: Admin
Date: 15th December 2018

இலங்கையில் சட்த்திரணிகளிடம் இருந்து நாம் பெற்றுக்கொள்ளும் சட்டஆலோசனைகளின் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் தம்மிடம் வரும் சேவைபெறுஞர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதனைக் கருத்திற்கொள்ளாது தனது சம்பாத்தியத்திற்கான ஒரு வழியாக மாத்திரம் சேவைபெறுஞர்களைப் பார்க்கும் சட்டத்தினிகளும் எமது சமூகத்தில் காணப் படுகின்றனர்.

Tuesday 27 November 2018

சமநிலைச் சமுதாயமும் சட்டத்துறை நிறுவனங்களும் நிபுணர்களும்

#சமநிலை  #shamanilai

பொது மக்கள்  சட்டத்தரணிகளிடம் தாம் பெற்றுக் கொள்ளும் சட்ட ஆலோசனைகளின் பொறுத்தப்பாடு குறித்து அறிந்துகொள்வது அத்திய அவசியமாகும்.



பொது மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைக்குத் தீர்வு தேடி நீதிமன்றத்தை நாடுவதில்  பலதரப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இவற்றுள் சட்டத்தரணிகளின் முறைகேடான சட்ட ஆலோசனைகள், சட்டத்தரணிகள் தமது வருமானத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு வழக்கை இழுத்துச்செல்வதற்கு ஏற்றதாக தகவமைத்தல், சட்டத்தரணிகள் வழக்கை இயன்றவரை இழுத்துச் செல்வது, மேலும் சட்டத்தரணிகளிடம் என்ன எதிர்பார்க்கின்றோம் என்ற தெளிவு பொதுமக்களிடம் இல்லாமை என்பன  குறிப்பிடத்தக்க சில அவதானங்களாகும்.