"மிகவும் தொழில்நுட்பம் சார்ந்த இவ்விடயம், உடணடியாக நிவாரணம் பெற்றுக்கொடுக்க வேண்டிய ஒரு விடயத்தைக் கொண்டுள்ள இந்த வழக்கில், நீதி வழங்குவதைத் தாமதப்படுத்தியுள்ளது. முறையான நீதி வழங்குவதில் தொழில்நுட்ப விடயங்களை ஆட்சேபனையாகக் கொண்டுவருவது தவிர்க்கப்படல் வேண்டும். மேலும் வழக்குகளில் எதிர்பார்க்கப்படும் நலன்களை உறுதிப்படுத்தி, நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு தரப்பினர் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
இத்தகைய தொழில்நுட்ப ரீதியான ஆட்சேபனைகளைக் கொண்டுவருவதால், அவற்றைக் கையாளும் உயர் நீதிமன்றங்கள் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடுகின்றன, உயர் நீதிமன்றங்களின் அதிகமான நேரத்தை இவை எடுப்பதுடன் ஏற்கெனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை இன்னும் தாமதப்படத்துகின்றது.
பெரும்பாலும் இத்தகைய தொழில்நுட்ப விடயங்களைக் கையாள்வது ஒரு கல்வி பயிற்சியாக மட்டுமே காணப்படுகின்றது. இவ்வாறான விடயங்களில் வழக்குகளைத் தாக்கல்செய்வோர் (Litigants) ஆர்வம் காட்டுவதுமில்லை. நீதிமன்றத்தின் பெறுமதியான நேரத்தை எடுத்துக் கொள்ளும் இவ்வாறான தொழில்நுட்ப ரீதியான ஆட்சேபனைகளைத் தவிர்ப்பதன் மூலம் நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்க முடியும்.
இங்கு வழக்காளிகள் முக்கியத்துவம் கொடுப்பது நீதிமன்றங்களில் இருந்து குறித்த பிரச்சினைக்கு நீதியைப் பெறுவதற்கே. அதுவே அவர்களின் எதிர்பார்க்கை ஆகும். மாறாக வழக்கில் கையாளப்படவேண்டிய தொழில்நுட்பங்கள் அவர்களது எதிர்பார்க்கையல்ல. அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டுள்ளபடி, நினைவில் வைக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் சட்டங்களைக் கையாளும் நீதிமன்றங்கள் நீதியை உறுதிப்படுத்தும் மன்றங்களேயன்றி சட்டங்களைக் கற்கைக்கு எடுத்துக்கொள்ளும் கல்விக்கூடமல்ல."
நீதிபதி. சுரேஷ் சந்த்ரா
வழக்குத் தீர்ப்பை முழுமயாக வாசிக்க...