Monday 24 December 2018

சுப்ரீம் கோட்ர் எச்சரிக்கை - நீதிமன்றங்கள் சட்டங்களைக் கற்கும் கல்விக்கூடமல்ல

"மிகவும் தொழில்நுட்பம் சார்ந்த இவ்விடயம், உடணடியாக நிவாரணம் பெற்றுக்கொடுக்க  வேண்டிய ஒரு விடயத்தைக் கொண்டுள்ள இந்த வழக்கில், நீதி வழங்குவதைத் தாமதப்படுத்தியுள்ளது. முறையான நீதி வழங்குவதில் தொழில்நுட்ப விடயங்களை ஆட்சேபனையாகக் கொண்டுவருவது தவிர்க்கப்படல் வேண்டும். மேலும் வழக்குகளில் எதிர்பார்க்கப்படும் நலன்களை உறுதிப்படுத்தி, நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு தரப்பினர் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
இத்தகைய தொழில்நுட்ப ரீதியான ஆட்சேபனைகளைக் கொண்டுவருவதால், அவற்றைக் கையாளும் உயர் நீதிமன்றங்கள் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடுகின்ற, உயர் நீதிமன்றங்களின் அதிகமான நேரத்தை இவை எடுப்பதுடன் ஏற்கெனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை இன்னும் தாமதப்படத்துகின்றது.
பெரும்பாலும் இத்தகைய தொழில்நுட்ப விடயங்களைக் கையாள்வது ஒரு கல்வி பயிற்சியாக மட்டுமே காணப்படுகின்றது. இவ்வாறான விடயங்களில் வழக்குகளைத் தாக்கல்செய்வோர் (Litigants) ஆர்வம் காட்டுவதுமில்லை. நீதிமன்றத்தின் பெறுமதியான நேரத்தை எடுத்துக் கொள்ளும் இவ்வாறான தொழில்நுட்ப ரீதியான ஆட்சேபனைகளைத் தவிர்ப்பதன் மூலம் நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்க முடியும்.
இங்கு வழக்காளிகள் முக்கியத்துவம் கொடுப்பது நீதிமன்றங்களில் இருந்து குறித்த பிரச்சினைக்கு நீதியைப் பெறுவதற்கே. அதுவே அவர்களின் எதிர்பார்க்கை ஆகும். மாறாக வழக்கில் கையாளப்படவேண்டிய தொழில்நுட்பங்கள் அவர்களது எதிர்பார்க்கையல்ல. அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டுள்ளபடி, நினைவில் வைக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் சட்டங்களைக் கையாளும் நீதிமன்றங்கள் நீதியை உறுதிப்படுத்தும் மன்றங்களேயன்றி சட்டங்களைக் கற்கைக்கு எடுத்துக்கொள்ளும் கல்விக்கூடமல்ல."
 நீதிபதி. சுரேஷ் சந்த்ரா
வழக்குத் தீர்ப்பை முழுமயாக வாசிக்க...


IN THE SUPREME COURT OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA

               S.C.Appeal 50/08
             

Before: 
Tilakawardane J,
Amaratunga J,
Suresh Chandra J.

Counsel: 
V.K.Choksy for Plaintiff-Respondent-Petitioner
K.K.Farooq for 1st Defendant-Respondent-Respondent
M.Farook Thahir with N.M.Reyaz for 2nd Defendant-Petitioner-Respondent

Argued on : 04th November 2010.

Decided on : 28th June 2011

Suresh Chandra J,

(இந்த வழக்கில்) வாதி பக்கத்தால் 1ஆவது, 2ஆவது பிரதிவாதிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு (சட்ட)நடவடிக்கை எடுத்து, அவருக்குச் சொந்தமான வளாகங்கள் கட்டமைப்பு ரீதியாகச் சேதமடைந்துள்ளதாக  குற்றம் சாட்டப்பட்டடுள்ளது. 1ஆவது பிரதிவாதியின் வளாகத்தில் தரையில் மிகவும் ஆழ்ந்த அகழ்வுகளை ஏற்படுத்திய பிரதிவாதிகளின் கட்டுமானத்தின் விளைவாக. ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய பிரதிவாதிகள் ஒப்புக்கொண்டது போன்று ஆவன செய்ய தவறிவிட்டனர். இந்த சேதத்திற்காக வாதி பிரதிவாதிகளிடம் ரூபாய். 2,016,783.00 கூட்டாகவும் தனித்தனியாக கோறுகின்றார். வாதி வெளிநாட்டில் குடியேறியபடியே அவரது வழக்கறிஞர் மூலம் இந்த (சட்ட) நடவடிக்கையை எடுத்துள்ளார்.  1ஆவது பிரதிவாதி அவரது குடியிருப்புக்கு அருகிலுள்ள வளாகத்தின் உரிமையாளர் ஆவார். மற்றும் 2ஆவது பிரதிவாதி 1ஆவது பிரதிவாதியின் வளாகத்தில் கட்டிட நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒப்பந்தக்காரர் ஆவார்.

1ஆவது பிரதிவாதி இது தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்து பதில் அளித்துள்ளார். வாதி பரிந்துரைத்த கோரிக்கையை மறுத்து வளாகத்தில் ஏற்பட்ட சேதங்கள் மீள்கட்டமைப்பதற்கு ரூபா. 325,000.00 சேதமாகக் கோரியதாகக் குறிப்பிட்டார். 

2ஆவது பிரதிவாதி இது தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்து பதில் அளித்துள்ளார். அவரது மறுப்பில் குறித்த வாதியால் வழக்கறிஞருக்கு வழங்கப்பட்டுள்ள பகர அதிகாரத்தில் (Power of Attorney)  1ஆவது பிரதிவாதிக்கு எதிராக (சட்ட) நடவடிக்கை எடுப்பதற்கு மட்டுமே சட்டத்தரணிக்கு அதிகாரம் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். 

வாதி இன்னொரு பிரதியை தாக்கல் செய்து 1ஆவது பிரதிவாதியை மட்டும் விசாரணை செய்வதற்கான கோரிக்கையை மறுத்தார். மேலும் பீ12 குறியீடிட்ட புதியதொரு பகர அதிகாரத்தையும் (Power of Attorney) இனைத்தார்.

விசாரணையின் (trial) போது, சேர்க்கைகளும் (admissions) சிக்கல்ளும் (issues) பதிவு செய்யப்பட்டன. அத்துடன் பிரதிவாதிகள்   குறித்த வாதியால் (சட்ட) நடவடிக்கை எடுக்குமாறு வேண்டி சமர்ப்பித்துள்ள பகர அதிகாரத்தை (Power of Attorney) அடிப்படையாக வைத்து 2ஆவது பிரதிவாதிக்கு எதிராக (சட்ட) நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற ஒரு  பிரச்சினையை எழுப்பினர்.. 

குறித்த பிரச்சினையைப் பற்றி வாதி, பிரதிவாதி தரப்பினர் தனது பக்கவாதங்களை எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்பாக (written submissions) முன்வைத்தனர். மேலும் அறிவார்ந்த மாவட்ட நீதிபதி குறித்த பிரச்சினையில் வாதி தரப்புக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தார். 

2ஆவது பிரதிவாதி இந்த முடிவால் பாதிக்கப்பட்டதால் சிவில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கு அறிவார்ந்த உயர் நீதிமன்றம் அறிவார்ந்த மாவட்ட நீதிபதியின் உத்தரவை ஒதுக்கிவைத்தது. 

தற்போதைய மேல்முறையீடு, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்ததாகும். மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப் பட்டுள்ள பந்தி 20 (அ), (சி), (டி) (ஈ) மற்றும் (ஜி) ஆகிய. கேள்விகளுக்கு இந்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

(அ) மேல் மாகாணத்தில் உள்ள சிவில் மேல்முறையீட்டு மாகாண உயர்நீதிமன்றம் பிரச்சினை இலக்கம் 19(அ) இல் கேற்கப்பட்டதற்குக் கொடுத்த பதிலில் தவறிழைத்துள்ளதா? குறித்த வாதியால் கொண்டுவரப்பட்ட வழக்கில் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பீ.டப்லியூ.ஏ. டெக்கர் சட்டபூர்வ வழக்கறிஞரா? மேலும் பிரச்சினை இலக்கம் 19(பீ) இற்கிணங்க, குறித்த வழக்கறிஞர் பீ.டப்லியூ.ஏ. டெக்கர் இரண்டாவது பிரதிவாதிக்கு எதிராக (சட்ட)நடவடிக்கை எடுப்பதற்கு பீ1 அடையாளமிட்டு மனுவுடன் சேர்ந்து சமர்ப்பித்த பகர அதிகாரம் (Power of Attorney) போதியளவு வலிமை கொண்டதா? ... 
(சீ) மேல் மாகாணத்தில் உள்ள சிவில் மேல்முறையீட்டு மாகாண உயர்நீதிமன்றம் கல்கிஸ்ஸ மாவட்ட நீதிமன்றத்தில் பீ1 அடையாள மனுவுடன் சேர்ந்து சமர்ப்பித்த பகர அதிகாரம் (Power of Attorney) பீ.டப்லியூ.ஏ. டெக்கர் என்பவருக்கு முறைப்பாட்டைச் செய்வதற்கு போதிய வலிமையைக் கொடுக்கவில்லை என எடுத்த தீர்மானத்தில் தவறிழைத்துள்ளதா? 
(D) குறித்த சிவில் மேல்முறையீட்டு மாகாண உயர்நீதிமன்றம் வாதியால் கல்கிஸ்ஸ மாவட்ட நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்;ட 2ஆவது பகர அதிகாரம் (Power of Attorney) மூலம் பீ.டப்லியூ.ஏ. டெக்கர் என்பவருக்கு முறைப்பாட்டைச் செய்வதற்கு போதிய வலிமையைக் கொடுக்கவில்லை என எடுத்த தீர்மானம் மூலம் சட்டரீதியாக தவறிழைத்துள்ளதா?
(இ) குறித்த சிவில் மேல்முறையீட்டு மாகாண உயர்நீதிமன்றம் பதிலியை (Proxy) எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் திருத்தங்களுக்கு உட்படுத்த முடியுமா என்பதனைக் கருத்திற்கொள்வதில் சட்டரீதியாகத் தவறிழைத்துள்ளதா? 
(G) குறித்த சிவில் மேல்முறையீட்டு மாகாண உயர்நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றத்தில் 2ஆவது பிரதிவாதி ஆட்சேபனை முன்வைப்பதில் காலதாமதமாகி விட்டதனைக் கருத்திற்கொள்ளாமை சட்டத்தில் தவறாகுமா? 
2ஆவது பிரதிவாதி தான் சமர்ப்பித்த பதிலில் ஆட்சேபனை (objection) எழுப்பிய பிரச்சினைகளுள் பகர அதிகாரம் (Power of Attorney) செல்லுபடியாதல் பற்றிய பிரச்சினையையும் எழுப்பி இருப்பின் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, உரிய தரப்பினரிடம் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை தாக்கல் செய்யுமாறு வேண்டியிருக்கும். 

அறிவார்ந்த மாவட்ட நீதிபதி தனது உத்தரவில் ஆரம்பத்தில் பீ1 குறியீடிட்டு சமர்ப்பிக்கப்பட்ட பகர அதிகாரம் (Power of Attorney) 2ஆவது பிரதிவாதிக்கு எதிராக (சட்ட)நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரம் வழங்கவில்லை எனவும் ஆனால் பி12 குறிறியீடிட்டு சமர்ப்பிக்கப்பட்ட 2ஆவ பகர அதிகாரம் (Power of Attorney) மூலம் (சட்ட)நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தைக் வாதிக்குக் கொடுக்கின்றது,. உண்மையில், வாதியால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது பகரஆதிகாரம் (Power of Attorney) 2ஆவது பிரதிவாதிக்கு எதிராக (சட்ட)நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை உறுதி ப்படுத்தியுள்ளது. அறிவார்ந்த மாவட்ட நீதிபதியின் உத்தரவில் 2ஆவது பகர அதிகாரம் (Power of Attorney) சமர்ப்பிக்கப்பட்டதன் காரணமாக 2ஆவது பிரதிவாதிக்கு எந்தப் பாரபட்சமும் ஏற்படவில்லை என்பதுவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆரம்பத்தில் சமர்ப்பித்த பகர அதிகாரம் (Power of Attorney) மூலம் 1ஆவது பிரதிவாதிக்கு எதிராக (சட்ட)நடவடிக்கை எடுக்க மட்டுமே அதிகாரம் அளிக்கப்பட்டது என்பதனை அடிப்படையாகக் கொண்டு 2ஆவது பிரதிவாதி தாக்கல் செய்த மேல்முறையீட்டு விண்ணப்பத்தை சிவில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் விடுப்பு மூலம் ஒதுக்கிவைத்தது. 

இரண்டாவது பகர அதிகாரம் (Power of Attorney)  (பீ12) குறித்து நீதிமன்ற விடுப்பில் குறிப்பிடுகையில் முதலாவது பகர அதிகாரத்தில் (Power of Attorney)  குறைபாடு எதுவும் இல்லை எனவும், 1ஆவது பிரதிவாதிக்கு எதிராக மட்டும் வழக்குத்தொடர அதிகாரமளிக்கின்றது எனவும், 2ஆவது பிரதிவாதிக்கு எதிராகவன்று எனவும் குறிப்பிடுகின்றது. நீதிமன்றம் மேலும் இதுபற்றி மேலும் குறிப்பிடுகையில் ஒரு முகவர் (Agent) மூலம் ஒரு (சட்ட)நடவடிக்கைத் தாக்கல் செய்யும்போது, அந்த முகவர் (சட்ட)நடவடிக்கையைத் தாக்கல் செய்யும் நேரத்தில் முதல்வர் (Principal) சார்பாக செயல்பட அதிகாரம் பெறுகிறார் எனவும் குறிப்பிடுகின்றது.

இந்த முறைப்பாடு வாதாட்டத்திற்கு வந்தபோது இருதரப்பு வழக்கறிஞர்களும் பல மேற்கோள்களை முன்வைத்தனர். ஆனால் இங்கு கருத்திற்கொள்ளப்படும் விடயத்தைத் துல்லியமாக சுட்டும் விதத்தில் எந்த ஒரு மேற்கோளும் இருக்கவில்லை.  அவற்றுள் பெரும்பாலான  தீர்மாணங்கள் பதிலிகள் (Proxies), குறையுள்ள பதிலிகள் (Defective Proxies) பற்றியதாகவும் பகர அதிகாரத்தை (Power of Attorney) அல்லது அதன் பிரதியைத் தாக்கல் செய்யும் போதும் அதற்குப் பிறகும் ஏற்படும் பிரச்சினை தொடர்பானதாகவும் இருந்தன. குறைபாடுள்ள பதிலிகளைச் (Defective Proxies) சரிசெய்வதில் நியாயமான அளவு நெகிழ்வுத்தன்மை காணப்படுகிறது. ஏனெனில் அவை உரிய தரப்பினரின் நலன்களைப் பாரபட்சமாக நடத்தாத தொழில்நுட்ப விடயங்களாகக் கருதப்படுகிறது 

இந்த உடனடி வழக்கில் பீ1 குறியீடிட்ட பகர அதிகாரம் (Power of Attorney) குறித்துறைக்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தையும் (Special powers) பொதுவான அதிகாரத்தையும் (General Powers) கொண்டுள்ள. சிறப்பு அதிகாரமானது, 1ஆவது பிரதிவாதிக்கு எதிராக (சட்ட)நடவடிக்கை எடுப்பதற்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்படுவதாகக் குறிப்பிடுகிறது. வழக்கறிஞருக்கு இது தொடர்பிலான ஏனைய பொது விடயங்கள் தொடர்பாக (சட்ட)நடவடிக்கை எடுப்பதற்கு பொது அதிகாரம் வழங்கப்படுகிறது. இரண்டாவது பகர அதிகாரமானது (Power of Attorney) (பி12) எந்தவொரு சிறப்பு அதிகாரத்தையும் குறிப்பிடாமல் வழக்கறிஞர் முதல்வரின் விவகாரம் தொர்பில் செயலாற்றுவதற்கான பொது அதிகாரத்தை வழங்கியுள்ளது. 

இந்த வழக்கில் சர்ச்சை என்னவெனில் பிரதிவாதிகள் இருவருக்கும் எதிராக (சட்ட)நடவடிக்கை எடுப்பதற்கு 1ஆவது பகர அதிகாரம்; (Power of Attorney) போதுமானதா இல்லையா அல்லது 2 ஆவது பகர அதிகாரம் (Power of Attorney) முதலாவது பகர அதிகாரத்தில் இல்லாத விடயங்களைப் பூர்த்தி செய்கின்றதா என்பதாகும். இந்த வழக்கில் நிழந்துள்ளது போன்று ஒரு வழக்கறிஞருக்கு இரண்டாவது பகர அதிகாரத்தை (Power of Attorney) வழங்குவதற்கான தடை எதுவும் இல்லை. முதலாவது பகர அதிகாரத்தில் (Power of Attorney) கொடுக்கப்பட்ட அதிகாரத்தின் மூலம் 2ஆவது பிரதிவாதிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட (சட்ட)நடவடிக்கை செல்லபடியாகுமா என்ற கேள்வி எழுகிறது. 

ஒரு பகர அதிகாரமானது (Power of Attorney)  பதிலாளின் (Proxy) நோக்கத்தை ஒத்த நோக்கத்தை நிறைவு செய்ய உதவும் ஓர் ஆவணமாகும். இவற்றால் பெரும் அதிகாரங்கள், முதல்வரால் (Principal) சில குறிப்பிட்ட செயல்பாடுகளை முன்னெடுப்பதற்குக் கொடுக்கப்படுகிறன. பதிலாள் (Proxy) மூலம் வழக்கு தொடர்பாக (சட்ட)நடவடிக்கை எடுக்க அல்லது பாதுகாக்க அதிகாரம் வழங்கப்படுகிறது, அதேவேளை பகர அதிகாரம் (Power of Attorney)  அதனை விடவும் விரிவானதாகும். ஒருவர் இன்னொருவரின் சார்பாக பொதுவாகவோ சிறப்பான சில (சட்ட)நடவடிக்கைகளை மேற்கோள்ளவோ இதன் மூலம் அதிகாரம் வழங்கலாம்.. 

தற்போதைய வழக்கில் 1ஆவது பகர அதிகாரம் (Power of Attorney) ஒரு சிறப்பு அதிகாரத்தைப் (Special Powers)பின்வரும் விதத்தில் வழங்கியுள்ளது: 

'திரு. முஜஹித் ஏ. காடர் மீது (சட்ட)நடவடிக்கை எடுத்து சேதத்தை கோர வேண்டும் ...... அந்த வழக்கு தொடர்பாக சம்பந்தமான எல்லா விடயங்களையும் செய்தல் வேண்டும்.' 
பகர அதிகாரத்தில் (Power of Attorney)  மேற்குறிப்பிட்ட கூற்றைத் தொடர்ந்து பின்வரும் பொது அதிகாரங்கங்ளும் (General Powers) வழங்கப்பட்டுள்ளன: 

'பொதுவாக வழக்கறிஞர் நடைமுறைப்படுத்த வேண்டிய, மேற்கொள்ள வேண்டிய அனைத்துச் செயல்களும் இதில் அடங்கும். எனது வியாபாரம், தோட்டங்கள், நிலங்கள், வீடுகள், கடன்கள், அல்லது ஏனைய விவகாரங்களில் நான் நினைப்பது போன்றும் எனது நோக்கத்தை நிறைவு செய்வதற்கு எனது தரப்பு வழக்கறிஞர் அவசியமானதெனக் கருதும் அனைத்தும், நானும் அப்படித்தான் செய்வேன் என அவர் கருதும் விடயங்கள் என அனைத்துவிடயத்திலும்  எனது எண்ணமும் தேவையும் ஈடுசெய்யப்படும் விதத்தில் முழுமையாக முகாமை செய்தல், கட்டுப்படுத்தல், நிர்வகித்தல் என்பவற்றை எனது வழக்கறிஞர் மேற்கொள்வார்.'
இவ்விரு கூற்றுக்களும் சேர்ந்து வழக்கறிஞருக்கு (சட்ட)நடவடிக்கை எடுப்பதற்கு அவசியமான சிறப்பு அதிகாரத்தையும், பொது அதிகாரத்தையும் வழங்குவதாக இருக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும். இது 1ஆவது பிரதிவாதிக்கும், 2ஆவது பிரதிவாதிக்கும் எதிராக (சட்ட)நடவடிக்கை எடுக்கப் போதுமானதாகும். இதனடிப்படையில் இரண்டாவது பகர அதிகாரமொன்று (Power of Attorney) அவசியமில்லை. எனினும், வாதி முன்னெச்சரிக்கையாக 2ஆவது பகர அதிகாரத்தை (Power of Attorney) வழங்கியுள்ளார். இது முதலாவது பகர அதிகாரத்தில் (Power of Attorney) வழக்கறிஞருக்குக் வழங்கப்பட்ட அதிகாரங்களை இன்னும் உறுதிப்படுத்துகின்றது. 1ஆவது பகர அதிகாரத்தில் (Power of Attorney) குறைபாடு இருப்பதாக அறிவார்ந்த மாவட்ட நீதிபதி கருதியபோதும் அத்தகைய பற்றாக்குறை எதுவும் அதில் இல்லை, எனவே 1ஆவது பகர அதிகாரம் (Power of Attorney) போதுமானதாக இல்லை என்ற அவரது முடிவு சரியல்ல.

இங்கு 2ஆவது பிரதிவாதிக்கு சார்பாக கிரைசில்டா ஹேவாவு - தோமஸ் ஹெவா (Gricilda Hewa v Thomas Hewa 1998 (3) SLLR 43வழக்கில் நிறைவேற்றப்பட்ட பின்வரும் தீர்மானம் மேற்கோளாக முன்வைக்கப்பட்டது, 
'முகவராகச் செயல்பட எந்த அதிகாரமும் இல்லாதபோது, ஒரு நபருக்கு முகவராக செயல்பட எந்த அதிகாரமும் இல்லை'.
 ஆனால், தற்போதைய வழக்கில், குறிப்பிடப்பட்ட முகவருக்கும் குறித்த பகர அதிகாரத்தில் (Power of Attorney)  பொது அதிகாரங்கள் பகுதியில் குறிப்பிட்டதற்கிணங்க முகவராக செயற்பட அதிகாரம் கொடுக்கப்படுகின்றது. அந்த வகையில் மேற்குறிப்பிட்ட வழக்கின் தீர்மானம் தற்போதைய வழக்கில் தாக்கம் செலுத்தவில்லை.

எனினும், சிவில் மேல்முறையீட்டு உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் 1ஆவது பகர அதிகாரத்தில் (Power of Attorney)  காணப்படும் சிறப்பு அதிகாரங்களைக் கருத்திற்கொண்டு அறிவார்ந்த மாவட்ட நீதிபதியின் உத்தரவை ஒதுக்கி வைத்தனர். ஆனால் 1ஆவது பகர அதிகாரம் (Power of Attorney) பற்றி மேற்குறிப்பிட்ட கண்டுபிடிப்பு தவறானது. ஆகவே சிவில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு செல்லுபடியாகாது. 

2ஆவது பிரதிவாதியால் எடுக்கப்பட்ட ஆட்சேபனை, மிகவும் தொழில்நுட்பமானது, அவரது பதிலில் ஆட்சேபனையை எடுத்துக் கொள்ள காத்திருப்பதைக் காட்டிலும் தொடர்ந்து பிரச்சினைகளை விவாதத்திற்கு உட்படுத்தி ஒழுங்குபடுத்தும் கட்டத்திற்கு வருவதற்கு முன்னர் சிவில் செயல்முறைக் கோவை பகுதி 46(2) (Civil Procedure Code s.46.s) மற்றும் அக்டாலினா பொன்சேகா - தர்சினி பொன்சேகா (Actalina Fonseka v Dharshani Fonseka 1989 (2) SLR 95) வழக்குத் தீர்புக்கும் இணங்க பதில் தாக்கல் செய்வதற்கு முன்னரே அவர் அவற்றை முன்வைத்திருக்க முடியும்.

மிகவும் தொழில்நுட்பம் சார்ந்த இவ்விடயம், உடணடியாக நிவாரணம் பெற்றுக்கொடுக்க  வேண்டிய ஒரு விடயத்தைக் கொண்டுள்ள இந்த வழக்கில், நீதி வழங்குவதைத் தாமதப்படுத்தியுள்ளது. முறையான நீதி வழங்குவதில் தொழில்நுட்ப விடயங்களை ஆட்சேபனையாகக் கொண்டுவருவது தவிர்க்கப்படல் வேண்டும். மேலும் வழக்குகளில் எதிர்பார்க்கப்படும் நலன்களை உறுதிப்படுத்தி, நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு தரப்பினர் ஊக்குவிக்கப்பட வேண்டும். இத்தகைய தொழில்நுட்ப ரீதியான ஆட்சேபனைகளைக் கொண்டுவருவதால், அவற்றைக் கையாளும் உயர் நீதிமன்றங்கள் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடுகின்ற, உயர் நீதிமன்றங்களின் அதிகமான நேரத்தை இவை எடுப்பதுடன் ஏற்கெனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை இன்னும் தாமதப்படத்துகின்றது. பெரும்பாலும் இத்தகைய தொழில்நுட்ப விடயங்களைக் கையாள்வது ஒரு கல்வி பயிற்சியாக மட்டுமே காணப்படுகின்றது. இவ்வாறான விடயங்களில் வழக்குகளைத் தாக்கல்செய்வோர் (Litigants) ஆர்வம் காட்டுவதுமில்லை. நீதிமன்றத்தின் பெறுமதியான நேரத்தை எடுத்துக் கொள்ளும் இவ்வாறான தொழில்நுட்ப ரீதியான ஆட்சேபனைகளைத் தவிர்ப்பதன் மூலம் நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்க முடியும். இங்கு வழக்காளிகள் முக்கியத்துவம் கொடுப்பது நீதிமன்றங்களில் இருந்து குறித்த பிரச்சினைக்கு நீதியைப் பெறுவதற்கே. அதுவே அவர்களின் எதிர்பார்க்கை ஆகும். மாறாக வழக்கில் கையாளப்படவேண்டிய தொழில்நுட்பங்கள் அவர்களது எதிர்பார்க்கையல்ல. அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டுள்ளபடி, நினைவில் வைக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் சட்டங்களைக் கையாளும் நீதிமன்றங்கள் நீதியை உறுதிப்படுத்தும் மன்றங்களேயன்றி சட்டங்களைக் கற்கைக்கு எடுத்துக்கொள்ளும் கல்விக்கூடமல்ல.

மேலே குறிப்பிட்ட சட்டக்கேள்விகள் தொடர்பில் இந்த நீதிமன்றம் தனது விடுப்பை வாதிக்கு ஆதரவாகக் கொடுக்கின்றது. மேலே உள்ள சூழ்நிலையில் வாதி இரு பிரதிவாதிகளுக்கு எதிராகவும் அவரது (சட்ட)நடவடிக்கையைத் தொடர உரிமை உண்டு, குறித்த மேல்முறையீடு அனுமதிக்கப்படுகிறது. மற்றும் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு தள்ளி வைக்கப்படுவதுடன் இரு பிரதிவாதிகளுக்கு எதிரான (சட்ட)நடவடிக்கையின் தொடர்ச்சியாக அறிவார்ந்த மாவட்ட நீதிபதியின் உத்தரவை உறுதிசெய்கிறது. 2ஆவது பிரதிவாதி எழுப்பிய ஆட்சேபனை காரணமாக, இந்த (சட்ட)நடவடிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நேரத்திலிருந்து கணிசமான காலம் சென்றுவிட்டதால் இந்த (சட்ட)நடவடிக்கையை விரைவாக விசாரனைக்குற்படுத்தவும் நிவர்த்திசெய்து கொடுக்கவும் மாவட்ட நீதிமன்றத்திற்குக் கட்டளை பிறப்பிக்கப்படுகின்றது. 1ஆவது பிரதிவாதி ரூபாய் 10,500 உம் 2ஆவது பிரதிவாதி ரூபாய் 21,500 சௌவினங்களுக்காக வாதிக்குச் செலுத்த வேண்டும் எனவும் இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

                                                                 JUDGE OF THE SUPREME COURT

TILAKAWARDANE J
                                        I agree.

                                                                JUDGE OF THE SUPREME COURT

AMARATUNGA J
                                        I agree.
                                                                JUDGE OF THE SUPREME COURT

No comments:

Post a Comment