Thursday 27 December 2018

எந்த நீதிமன்றத்தில் எதைக் கோருவது? வழக்காளிகளும் வழக்கறிஞர்களும்!

"மனுதாரர் அந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் (Suprem Court) மேல்முறையீடு செய்யாமல் அதற்குப் பதிலாக இங்கு (Court of Appeal) இந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளார்."
 "ஒருவிடயத்தை நான் இங்கு நேரடியாகவே குறிப்பிட வேண்டும். 
சிவில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒதுக்கி வைக்க இந்த நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை, அதற்கான அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது."
 நீதிபதி: Samayawardhena

 முழுத்தீர்ப்பையும் வாசிக்க ...


IN THE COURT OF APPEAL OF THE DEMOCRATIC 
SOCIALIST REPUBLIC OF SRI LANKA

G.A. Micheal Stanly Silva,
No. 185,
Samanala Mawatha,
K.C. de Silva Puraya,
Thimbirigaskatuwa.
Petitioner
CASE NO: CA/28/2017/RI

Vs.

W. Seebert Silva,
No. 189,
Baseline Road,
K.C. de Silva Puraya,
Thimbirigaskatuwa.
Respondent
Before: Mahinda Samayawardhena, J.

Counsel: N.M. Reyaz for the Petitioner.

Written submissions on: 26.06.2018

Decided on: 29.06.2018

Samayawardhena, J.

இந்த வழக்கின் பிரதிவாதி நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாரருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, காணியுறுதியை அறிவிக்குமாறும் குறித்த இடத்திலிருந்து மனுதாரரை வெளியேற்றுமாறும் வழக்குத் தொடர்ந்தார். சுட்டிக்காட்டப்பட்ட சேவை (Pointed out service) மூலம் மனுதாரர் மீது அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மனுதாரர் பெயர் மற்றும் முகவரி சரியாகக் குறிப்பிடப்படவில்லை என்று கூறி அழைப்பாணைப் பத்திரங்களை நீதிமன்றத்தில் திரும்பி ஒப்படைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (பார்க்க: மாவட்ட நீதிமன்றச் சுருக்கம், பக்கம் 132 இல் உள்ள பீ1 குறியீடிட்ட கடிதம்). 

மாவட்ட நீதிமன்றம் ஒருதரப்பு விசாரணைக்குக் (ex parte trial) திகதி குறிப்பிட்டு, பின்னர் பிரதிவாதிக்கு சார்பாகத் தீர்ப்பும் வழங்கியது. மனுதாரர் மீது ஒருதலையான ஆணை (ex parte decree) பிறப்பிக்கப்பட்டு ஏற்கெனவே குறிப்பிட்ட பெயரிலும் முகவரியிலும் மனுதாரர்க்கு அத்தீர்ப்பு அனுப்பிவைக்கப்பட்டது. 

மனுதாரர் சிவில் நடைமுறைக் கோவை பிரிவு 86(2) இற்கமைய நீதிமன்றக் கட்டளையை முறித்த குற்றத்திற்கு உள்ளாகுமுன் அதற்கெதிராக விண்ணப்பம் செய்தார். எனினும் குறித்த விண்ணப்பத்திற்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குறிப்பிடப்பட்ட தினத்தில் மனுதாரர் அல்லது அவரது சார்பாக வேறு எவரும் வருகை தராமையால் நீதிமன்றம் ஒருதலையாகக் கொடுத்த ஆணையை உறுதிப்படுத்தியது (பார்க்க: மனுதாரரின் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்பில் 7ஆவது பந்தி). 

பல மாதங்கள் கழிந்து, இந்த வழக்கின் பிரதிவாதி விண்ணப்பித்தைக் கருத்திற்கொண்டு நீதிமன்றம் மனுதாரருக்கு எதிராக நீதிப்பேரானை (writ) பிறப்பித்தது. மீண்டும் மனுதாரர் குறித்த நீதிப்பேராணையை நடைமுறைப்படுத்தாது நிறுத்திவைக்குமாறு வேண்டி இன்னொரு விண்ணப்பத்தை முன்வைத்தார். இந்த விண்ணப்பத்தை அனுமதிக்காது மாவட்ட நீதிபதி 23.01.2009 தேதியிட்டு விடுத்த உத்தரவின் பிரகாரம், அவரை வெளியேற்றுவதற்கான விடுப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டார். 


அந்த உத்தரவுக்கு எதிராக மனுதாரர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்தார், மனுதாரரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி 06.10.2016 திகதியிட்ட தீர்ப்பில் அம்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது.


மனுதாரர் அந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் அதற்குப் பதிலாக அவர் இந்த விண்ணப்பத்தை 22.11.2017 ஆம் திகதி தாக்கல் செய்து அசல் நிலைக்கு மீட்டுத்தருமாறும் (restitutio in integrum) (அ) இந்த வழக்கை ஒருதலை விசாரணைக்கு தினம் குறிப்பிட்டது முதல் மாவட்ட நீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் செயலிழக்கச்செய்ததாக (Null and Void) அறிவிக்குமாறும் (ஆ) சிவில் மேல்முறையீட்டு நீதிமன்றம். தீர்ப்பை ஒதுக்கி வைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.


ஒருவிடயத்தை நான் இங்கு நேரடியாகவே குறிப்பிட வேண்டும். சிவில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒதுக்கி வைக்க இந்த நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை, அதற்கான அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.


இப்போது மனுதாரரின் சொல்லும் விடயம் குறித்த ஆய்வுக்கு வருகின்றேன். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கை ஒருதலை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது முதல் அனைத்து நடவடிக்கைகளையும் செயலிழக்கச்செய்ய வேண்டுமென (Null and void) ஏன் மனுதாரர் கூறுகிறார். அவர் அதற்கு முன்வைக்கும் காரணம் அழைப்பாணை அவருக்கு முறையாக அனுப்பப்படவில்லை என்பதாகும்.  

தனக்கு அழைப்பாணை முறையாக அனுப்பப்படவில்லை என ஏன் அவர் கூறுகிறார்? ஏனென்றால், அழைப்பாணையில் குறிப்பிட்டுள்ள பெயரும் முகவரியும் துல்லியமாகக் குறிப்பிடப்படவில்லை எனவும் அவரது பெயரும் முகவரியும் "P.K. Stanly Micheal Silva, No.189/2, Samanala Mawatha, K.C. de Silva Puraya, Thibirigaskatuwa எனக் குறிப்பிடப்பட்டிருந்தது எனவும் அவரது உண்மையான பெயரும் முகவரியும் "G.A. Stanly Micheal Silva, No.185, Samanala Mawatha, K.C. de Silva Puraya, Thibirigaskatuwa" எனவும் குறிப்பிட்டுள்ளார். 


மனுதாரரின் எழுத்துமூல சமர்பிப்பில் 20ஆம் பிரிவில், தானும் (மனுதாரர்) பிரதிவாதியும் ஒரே இடத்தில் வாழ்ந்து வந்ததால் பிதரிவாதி தனது சரியான பெயரையும், முகவரியையும் அறிந்திரு க்க வேண்டுமெனக் குறிப்பிடுகிறார். 


விலாசத்திலும் வீட்டு முகவரி இலக்கத்திலும் வேறுபாடு இருப்பினும் பிரதிவாதி சுட்டிக்காட்டப்பட்ட சேவைவழங்குனரிடம் (Fiscal) சரியான எதிர்வாதியையே சுட்டிக்காட்டியுள்ளார் என்பதனை இதிலிருந்து மிகத் தெளிவாக விளங்கலாம். 


பெயரிலும் முகவரியிலும் காணப்படும் சிறிய வேறுபாடு பிரச்சினைக்குரிய விடயமல்ல, சரியான நபர் அடையாளம் காணப்பட்டு, அழைப்பாணை ஒப்படைக்கப்படும் பட்சத்தில் அந்த வேறுபாடுகளைத் திருத்த முடியும். ஏனென்றால் 'பெயர்கள் நபர்களைக் குறிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன, வழக்குகள் பெயர்களுக்கு எதிராககத் தொடுக்கப் படுவதில்லை, மாற்றமாகக் குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராகவே'.  (Parsons v. Abdul Cader1, W.M. Mendis & Co v. Excise Commissioner2, Mohinudeen v. Lanka Bankuwa, York Street, Colombo 13).


பார்சன்ஸ் வழக்கில் நடைபெற்றது போன்று, 'ஒரு நபருக்கு எதிராக வழக்கில் தீர்ப்பு தவறான பெயரில் வழங்கப்பட்டால், தீர்ப்பு வழங்கப்பட்ட பின்பும் கூட, அந்தப் பெயரை திருத்துவதற்கு நீதிமன்றத்திற்கு இயல்பிலேயே அதிகாரம் உண்டு' 

அசல் நிலைக்கு மீட்டுக் கொடுக்கும் (restitutio in integrum) விதத்திலான தீர்வு  ஒரு அசாதாரண தீர்வாகும். இத்தீர்வு மிக விதிவிலக்கான சூழ்நிலையில் மட்டுமே வழங்கப்படுகிறது. (Halib Abdul Cader Ameer v. Danny Perera4, Sri Lanka Insurance Corporation Ltd v. Shanmugam5). 

இந்த வழக்கில் அவ்வாறான சூழ்நிலையைக் காணவில்லை. நான் பிரதிவாதி மீது புகார் தெரிவிப்பதை மறுக்கின்றேன். 

விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படுகிறது.


மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி

No comments:

Post a Comment