Wednesday 23 January 2019

வரலாற்று முக்கியத்துவம் மிக்க சட்டத்தீர்ப்பு – பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் சிறுவர் கண்காணிப்பு, தரிசித்தல், சிறுவர் பராமரித்தல் மற்றும் சிறுவர் சிறுமியர் மீது தாய் தந்தை இருவருக்குமான கடமைகள் தொடர்பில் பின்வரும் விரிவான திட்டத்தைப் வெளியிட்டு உள்ளது. 
1. வயதுக்கு வராத சிறுவர் சிறுமியர் தாயின் பொறுப்பில் இருப்பர் 
2. ஒன்று விட்ட வார இறுதி நாட்களில் சிறார்கள் தந்தையுடன் தங்கலாம். தந்தை சிறார்களை தாயின் வீட்டிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணிக்கு அழைத்துச் சென்று நாயிற்றுக்கிழமை மாலை ஒரு மணிக்கு தாய் வீட்டில் கொண்டுபோய் விடவேண்டும். 


3. கோடைக்கால விடுமுறை நாட்களில் பள்ளி/அரசு விடுமுறையை அறிவித்ததும் முதல் ஞாயிற்றுக் கிழமை சிறுவர்களைத் தந்தையின் கண்காணிப்புக்கு ஒப்படைக்க வேண்டும். விடுமுறை காலப்பகுதியில் நான்காவது ஞாயிற்றுக்கிழமை மாலை அவர்களைத் தாயிடம் திருப்பி அனுப்ப வேண்டும். அந்தச் சிறார்களுக்கு நான்கு வாரங்கள் தந்தையுடன் கழிக்கலாம் 
4. குளிர்கால விடுமுறைகள் பொதுவாக டிசம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியாகும். இக்குளிர்கால விடுமுறையில் முதல் வாரத்தில் சிறுவர்கள் தந்தையுடனும் இரண்டாவது வாரத்தில் தாயுடனும் கழிப்பார்கள். 
5. ஈத் உல்-பித்ர் நோன்புப் பொறுநாளின் போது முன்னைய நாள் இரவு எட்டு மணி முதல் பெருநாளன்று இரவு எட்டு மணி வரை சிறுவர்கள் தமது தந்தையுடன் இருப்பர். 
6. ஈத் உல்-ஆழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளில் தாய் தமது பிள்ளைகளைத் தந்தையுடன் பெருநாள் கொண்டாடுவதற்கும் அனுமதிக்க வேண்டும். பெருநாள் திணத்தை அடுத்து இரண்டாம் நாளில், காலை 11 மணியளவில், தந்தை சிறுவர் சிறுமியரைத் தாயின் வீட்டிலிருந்து அழைத்துச் சென்று அடுத்த நாள் காலை பத்துமணியளவில் அல்லது அதற்கு முன்னர் திருப்பி ஒப்படைக்க வேண்டும். 
7. திட்டமிடப்படாத விடுமுறைகளின் போது ஒன்று விட்டு அடுத்த விடுமுறையில் காலை பத்து மணி முதல் இரவு எட்டு மணிவரை சிறுவர் சிறுமியர் தனது தந்தையுடன் கழிக்கலாம். 
8. சிறுவர்களுக்கான அனைத்துக் கல்விச் செலவினங்களையும்; அதாவது பாடசாலைக் கட்டணம், சீருடைகள், வாகனப் போக்குவருத்துக் கட்டணங்க ளையும் இதர பிற செலவினங்க ளையும் தந்தை பொறுப்பேற்க வேண்டும். 
9. அத்தகைய செலவினங்களுக்கு மேலதிகமாக, இதர சௌவுகளுக்காக ஒவ்வொரு சிறுவர் சிறுமியருக்கும் மாதத்திற்கும் ரூ 5,000 வீதம் தந்தை வழங்க வேண்டும்.
10. எந்தவொரு குடும்ப வைபவத்திலும் தந்தை விரும்பினால் அவரது மகன்கள் கலந்து கொள்ளலாம். அத்தகைய குடும்ப நிகழ்வுகள் பற்றி தாய்க்கு அறியப்படுத்த வேண்டும். அத்துடன் நியாயமான காரணம் எதுவிமின்றி தாய் அச்சிறார்கள் குறித்த வைபவங்களில் பங்குபற்றுவததை தடுக்க முனையக் கூடாது. 
11. தாய் மற்றும் தந்தை இருவரும் சிறுவர்கள் மனதில் அடுத்தவரைப் பற்றிப் பாரபட்சம் ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது. .
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்


To Read Previous Posts...

1. Incomplete "Writ Application" is either academic or futile exercise - The Court of Appeal

2. "Courts of law are Courts of justice and not academies of law" - Supreme Court of Sri Lanka

No comments:

Post a Comment